PBT POST ADMIN அரசியல் கன்னியாகுமரியில் ரயில் தவறிய ஆத்திரம் — ஸ்டேஷன் மாஸ்டரை தாக்கிய வடமாநில இளைஞர் கைது
அரசியல்

கன்னியாகுமரியில் ரயில் தவறிய ஆத்திரம் — ஸ்டேஷன் மாஸ்டரை தாக்கிய வடமாநில இளைஞர் கைது

மத்திய பிரதேசத்தை சேர்ந்த சுபாஷ் ஜிலாங்கியா சிறையில் அடைப்பு; நாகர்கோவில் ரயில்வே போலீசார் நடவடிக்கை

கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் ரயிலை தவறவிட்ட ஆத்திரத்தில் ஸ்டேஷன் மாஸ்டர் அகிலேஷை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த சுபாஷ் ஜிலாங்கியா (31) என்பவர் மதுபோதையில் ஸ்டேஷன் மாஸ்டருடன் தகராறு செய்து, பின்னர் உடல் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தகவல் அறிந்த நாகர்கோவில் ரயில்வே போலீசார் விரைந்து வந்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சுபாஷ் ஜிலாங்கியா சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, தமிழகத்தில் அதிகரித்து வரும் மது மற்றும் போதைப் பொருள் பழக்கங்கள் குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

 

குறிப்பாக பிழைப்பிற்காக தமிழ்நாட்டிற்கு வரும் வடமாநில தொழிலாளர்களும் இந்த போதை கலாச்சாரத்தால் பாதிக்கப்பட்டு குற்றச்செயல்களில் ஈடுபடும் நிலை உருவாகி வருவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சட்டம்-ஒழுங்கு மற்றும் போதைப் பொருள் கட்டுப்பாட்டில் அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version