April 18, 2026
CHENNAI - INDIA

ADMIN

அரசியல்

மேற்கு வங்க அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை

பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள், ஐ.ஜி.களுடன் விவாதம் நாளை மாநில தேர்தல் அதிகாரி, வருமானவரித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, அங்குள்ள உயர் அதிகாரிகளுடன் இரண்டு நாள் ஆன்லைன் ஆலோசனையை தொடங்கியுள்ளது. பாதுகாப்பு மற்றும் நிர்வாக முன்னேற்பாடுகள் தொடர்பாக இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனையில் மனோஜ் குமார் அகர்வால் தலைமையில் மாநில தலைமை தேர்தல் அதிகாரி, மாவட்ட ஆட்சியர்கள், ஐ.ஜி.கள், மாவட்ட காவல்துறை

Read More
அரசியல்

இன்ஸ்டாகிராமில் 106 மில்லியன் பின்தொடர்பவர்கள் – உலக சாதனை படைத்தார் பிரதமர் மோடி

இன்ஸ்டாகிராமில் 106 மில்லியன் பின்தொடர்பவர்கள் – உலகத் தலைவர்களில் புதிய சாதனை படைத்த பிரதமர் மோடி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சமூக ஊடகத் தளமான இன்ஸ்டாகிராமில் 106 மில்லியன் (10.06 கோடி) பின்தொடர்பவர்களை கடந்த முதல் உலகத் தலைவர் மற்றும் அரசியல்வாதி என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். உலகத் தலைவர்களிடையே சமூக ஊடகங்களில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் அரசியல்வாதியாக அவர் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். 2014 ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராமில் இணைந்த பிரதமர் மோடி, கடந்த 12

Read More
சினிமா

“மெண்டல் மனதில்” படத்தின் முதல் பாடல் “உயிரே உயிரே” வெளியீடு

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் நாயகனாக நடிக்கும் “மெண்டல் மனதில்” திரைப்படத்தின் முதல் பாடல் “உயிரே உயிரே” வெளியாகியுள்ளது. இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் நடிகை மாதுரி ஜெயின் நாயகியாக நடிக்க, நடிகை சீதா முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கும் இந்த திரைப்படம், ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் உருவாகுவதால் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காதல் மற்றும் உணர்ச்சி கலந்த பாடலாக அமைந்துள்ள “உயிரே உயிரே”

Read More
சினிமா

“மகனுக்காகவே விலகினேன்” – நடிகை கனிகா

எதிர்நீச்சல் 2 தொடரை விட்டு வெளியேறிய நடிகை கனிகா விளக்கம் எதிர்நீச்சல் 2 தொடரிலிருந்து திடீரென விலகியதற்கான காரணம் குறித்து நடிகை கனிகா விளக்கம் அளித்துள்ளார். முதல் பாகத்தில் ஈஸ்வரி கதாபாத்திரம் மூலம் ரசிகர்களை கவர்ந்த அவர், தொடரிலிருந்து விலகியதற்கு பல்வேறு காரணங்கள் சமூக வலைதளங்களில் பேசப்பட்ட நிலையில், தற்போது உண்மையான காரணத்தைத் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் 2022 ஆம் ஆண்டுக்கான சின்னத்திரை விருதுகளில் எதிர்நீச்சல் தொடரில் சிறப்பாக நடித்ததற்காக கனிகா சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருதை

Read More
சினிமா

நடிகர் பாக்யராஜ் செய்த துரோகம்

கசப்பான அனுபவத்தை பகிர்ந்த இயக்குநர் சுந்தர்ராஜன்   இயக்குநரும் நடிகருமான சுந்தர்ராஜன், தன் சினிமா வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் சந்தித்த கசப்பான அனுபவங்களை சமீபத்திய நேர்காணலில் பகிர்ந்து கொண்டார். பல வெற்றிப் படங்களை இயக்கியதுடன், நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்துள்ள அவர், தனது நண்பரும் நடிகர்-இயக்குநருமான பாக்யராஜுடன் ஏற்பட்ட மனவருத்தத்தை வெளிப்படுத்தினார். சுந்தர்ராஜன் கூறுகையில், தானும் பாக்யராஜும் கோவையில் உள்ள பாப்பநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், ஒரே பள்ளியில் படித்த நண்பர்கள் என்றும் தெரிவித்தார். சினிமாவுக்கான ஆர்வம் காரணமாக

Read More
சினிமா

திருமண கொண்டாட்டத்தில் விஜய் தேவரகொண்டா – ரஷ்மிகா மந்தனா? வைரலாகும் முன்னோட்டப் பதிவுகள்

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ரஷ்மிகா மந்தனா திருமணம் செய்து கொள்ள உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வேகமாக பரவி வருகின்றன. நீண்ட காலமாக இருவரும் காதலித்து வருவதாக கூறப்பட்ட நிலையில், திருமணத்திற்கு முன்பான கொண்டாட்டக் காட்சிகள் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. விஜய் தேவரகொண்டா – ரஷ்மிகா மந்தனா இணைந்து கீதா கோவிந்தம் (2018), மை டியர் காம்ரேட் (2019) போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான ஜோடியாக மாறினர். மேலும், இந்த

Read More
அரசியல் திமுக

ஓ.பி.எஸ். தி.மு.க.வுக்கு சென்றால் த.வெ.க.வுக்கு செல்வோம் – ஆதரவாளர்கள் திடீர் போர்க்கொடி

காஞ்சிபுரம் நிர்வாகிகள் உட்பட 75 பேர் விலகல்; நீலகிரியில் ஆதரவாளர்கள் கடும் எச்சரிக்கை தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. முக்கிய கட்சிகள் கூட்டணி அமைப்பு, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் அடுத்த கட்ட அரசியல் நிலைப்பாடு குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தை வழிநடத்தி வரும்

Read More
அரசியல்

முன்னாள் மத்திய அமைச்சர் முகுல் ராய் மறைவு — பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்

அரசியல் அனுபவமும் சமூகப்பணியும் என்றும் நினைவில் இருக்கும் என இரங்கல் பதிவு முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த அரசியல் தலைவருமான முகுல் ராய் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது மறைவு அரசியல் துறைக்கு பெரிய இழப்பு எனக் குறிப்பிட்ட பிரதமர், சமூக வலைதளப் பதிவின் மூலம் தனது அனுதாபத்தை வெளிப்படுத்தினார். பிரதமர் வெளியிட்ட பதிவில், முகுல் ராய் நீண்டகால அரசியல் அனுபவம் கொண்டவர் என்றும், பொதுமக்கள் நலனுக்காக பல்வேறு துறைகளில் பணியாற்றியவர்

Read More
அரசியல்

அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு ஆசிரியர்கள் இல்லை — திமுக அரசுக்கு அன்புமணி இராமதாஸ் கண்டனம்

“தமிழரும் தொழில்நுட்பமும்” பாடம் கற்பிக்க பேராசிரியர்கள் நியமனம் அவசியம்; மாணவர்கள் படிக்காமலே தேர்வு எழுதும் நிலை என குற்றச்சாட்டு சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் முதலாமாண்டு பொறியியல் படிப்பில் இடம்பெற்றுள்ள “தமிழரும் தொழில்நுட்பமும்” என்ற பாடத்தைக் கற்பிப்பதற்கு உதவிப் பேராசிரியர்கள் ஒருவர் கூட இல்லை என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆசிரியர்கள் இல்லாத சூழலில், தற்போது நடைபெற்று வரும் அகமதிப்பெண் தேர்வுகளில் மாணவர்கள் பாடத்தை முறையாக கற்காமலேயே

Read More
அரசியல்

கன்னியாகுமரியில் ரயில் தவறிய ஆத்திரம் — ஸ்டேஷன் மாஸ்டரை தாக்கிய வடமாநில இளைஞர் கைது

மத்திய பிரதேசத்தை சேர்ந்த சுபாஷ் ஜிலாங்கியா சிறையில் அடைப்பு; நாகர்கோவில் ரயில்வே போலீசார் நடவடிக்கை கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் ரயிலை தவறவிட்ட ஆத்திரத்தில் ஸ்டேஷன் மாஸ்டர் அகிலேஷை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த சுபாஷ் ஜிலாங்கியா (31) என்பவர் மதுபோதையில் ஸ்டேஷன் மாஸ்டருடன் தகராறு செய்து, பின்னர் உடல் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தகவல் அறிந்த நாகர்கோவில் ரயில்வே போலீசார் விரைந்து வந்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர்

Read More