April 16, 2026
CHENNAI - INDIA
சினிமா

“மெண்டல் மனதில்” படத்தின் முதல் பாடல் “உயிரே உயிரே” வெளியீடு

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் நாயகனாக நடிக்கும் “மெண்டல் மனதில்” திரைப்படத்தின் முதல் பாடல் “உயிரே உயிரே” வெளியாகியுள்ளது. இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் நடிகை மாதுரி ஜெயின் நாயகியாக நடிக்க, நடிகை சீதா முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கும் இந்த திரைப்படம், ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் உருவாகுவதால் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காதல் மற்றும் உணர்ச்சி கலந்த பாடலாக அமைந்துள்ள “உயிரே உயிரே” பாடல் வெளியாகியதும் சமூக வலைதளங்களில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தப் பாடலை தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர் கார்த்தி பிப்ரவரி 25 அன்று வெளியிட்டார். ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘மயக்கம் என்ன’ படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்துள்ள செல்வராகவன் – ஜி.வி. பிரகாஷ் குமார் கூட்டணி மீண்டும் ரசிகர்களை கவரும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service

PROS

+
Add Field

CONS

+
Add Field
Choose Image
Choose Video