
பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள், ஐ.ஜி.களுடன் விவாதம்
நாளை மாநில தேர்தல் அதிகாரி, வருமானவரித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை
இந்திய தேர்தல் ஆணையம் மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, அங்குள்ள உயர் அதிகாரிகளுடன் இரண்டு நாள் ஆன்லைன் ஆலோசனையை தொடங்கியுள்ளது. பாதுகாப்பு மற்றும் நிர்வாக முன்னேற்பாடுகள் தொடர்பாக இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது.
இந்த ஆலோசனையில் மனோஜ் குமார் அகர்வால் தலைமையில் மாநில தலைமை தேர்தல் அதிகாரி, மாவட்ட ஆட்சியர்கள், ஐ.ஜி.கள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் மத்திய பாதுகாப்புப் படை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகள், சட்டம்-ஒழுங்கு நிலை மற்றும் தேர்தல் சீர்தூக்கம் குறித்த அம்சங்கள் விரிவாகப் பேசப்பட்டு வருகின்றன. இன்றைய ஆலோசனை மாலை 6 மணி வரை நடைபெறும் என்றும், நான்கு கட்டங்களாக விவாதம் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
நாளை காலை 10 மணி முதல் மாநில தேர்தல் அதிகாரி, ரிசர்வ் வங்கி மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருடன் தனித்த ஆலோசனை நடைபெற உள்ளது. இவ்வாரத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் மேற்கு வங்கத்திற்கு நேரில் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், இன்றும் நாளையும் ஆன்லைன் வழியாக ஆலோசனை நடைபெறுவது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

Leave feedback about this