February 24, 2026
CHENNAI - INDIA
அரசியல்

2 வயது குழந்தை கடத்தல் முயற்சி – தம்பதியினர் கைது


குலசேகரப்பட்டினத்தில் 2 வயது குழந்தை கடத்தல் முயற்சி – 20 நிமிடத்தில் போலீஸ் மீட்பு, தம்பதியினர் கைது

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரப்பட்டினம் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வரும் கார்த்திக்–முத்துச்செல்வி தம்பதியினரின் இரண்டு வயது குழந்தையை கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தண்ணீர் வாங்கும் போல கடை முன்பு வந்த தம்பதியினர், அங்கு நின்றிருந்த குழந்தையை கண்ணிமைக்கும் நேரத்தில் தூக்கிச் சென்று தப்பினர். இதையடுத்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதுடன், தாய் முத்துச்செல்வி கடத்தல்காரர்களை துரத்திச் சென்றார்.

தகவலின் பேரில் விரைந்து செயல்பட்ட போலீசார் குலசேகரப்பட்டினம்–திருச்செந்தூர் பைபாஸ் சாலையில் தம்பதியினரை மடக்கி பிடித்து சுமார் 20 நிமிடங்களில் குழந்தையை பாதுகாப்பாக மீட்டனர். சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்த லிங்கத்துரை–ஜெயந்தி தம்பதியினர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. குழந்தை இல்லாத ஏக்கத்தால் கடத்தல் முயற்சி செய்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service

PROS

+
Add Field

CONS

+
Add Field
Choose Image
Choose Video